இன்ஸ்டா பழக்கம்.. நடுரோட்டில் கல்லூரி மாணவி சரமாரி குத்திக் கொலை.. காதலன் வெறிச்செயல்

என்ஜினீயரிங் கல்லூரி மாணவி ஒருவர் நடுரோட்டில் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆந்திர மாநிலம் குண்டூர் அருகிலுள்ள அமர்தலுரு கிராமத்தைச் சேர்ந்தவர் ரம்யா. பொறியி யல் கல்லூரி ஒன்றில் மூன்றாமாண்டு பி.டெக்…

என்ஜினீயரிங் கல்லூரி மாணவி ஒருவர் நடுரோட்டில் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆந்திர மாநிலம் குண்டூர் அருகிலுள்ள அமர்தலுரு கிராமத்தைச் சேர்ந்தவர் ரம்யா. பொறியி யல் கல்லூரி ஒன்றில் மூன்றாமாண்டு பி.டெக் படித்து வந்தார். இவருக்கு ஆறு மாதத்துக்கு முன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமானவர் சாய் கிருஷ்ணா (22). குண்டூர் அருகில் உள்ள முட்லுருவை சேர்ந்த இவர், பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு மெக்கானிக் ஷாப்பில் பணியாற் றி வருகிறார். இப்போது அவருக்கு வேலை இல்லை.

ரம்யாவுக்கும் கிருஷ்ணாவுக்கும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்த பழக்கம் காதலாக மாறியது. இந்நிலையில் ரம்யா வேறு யாரையோ காதலிப்பதாக கிருஷ்ணாவுக்கு சந்தேகம். இது தொடர்பாக இருவருக்கும் பிரச்னை.

இந்நிலையில் நேற்றும் இதுதொடர்பான வாக்குவாதம் இருவருக்கும் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கிருஷ்ணா, மறைத்து வைத்திருந்த கத்தியால் ரம்யாவை சரமாரியாகக் குத்தினார்.

இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர், அவரை பிடிக்க முயன்றனர். ஆனால், கிருஷ்ணா, யாரும் அருகில் வந்தால் குத்திவிடுவேன் என்று மிரட்டிவிட்டு தப்பியோடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ரம்யாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ரம்யாவின் கழுத்து மற்றும் வயிற்றில் ஆறு இடங்களில் கத்தி குத்து விழுந்துள்ளது.

இந்த கொலை சம்பவம் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. அதைக் கைப்பற்றிய போலீசார், செல்போன் சிக்னலை வைத்து தப்பியோடிய கிருஷ்ணாவை மடக்கி பிடித்தனர். இந்தச் சம்பவம் ஆந்திராவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, பட்டப்பகலில் நடந்த கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.