புதுச்சேரியில் நேற்று மட்டும் 9,841 பேருக்கு கொரோனா தடுப்பூசி!

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று 9,841 நபர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். புதுச்சேரி மாநிலத்தில் இரண்டு நாட்களில் மொத்தமாக 17 ஆயிரத்து 013 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில்…

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று 9,841 நபர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

புதுச்சேரி மாநிலத்தில் இரண்டு நாட்களில் மொத்தமாக 17 ஆயிரத்து 013 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பராவலை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று முதல் தொடர்ந்து 4 நாட்கள் தடுப்பூசி திருவிழா 100 இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி திருவிழாவின் முதல் நாளான நேற்று முன்தினம் மாநிலம் முழுவதிலும் 7 ஆயிரத்து 172 பேர் தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர்.

இந்நிலையில் இரண்டாம் நாளான நேற்று 9 ஆயிரத்து 841 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 8,027 பேரும், காரைக்காலில் 1,539 பேரும், ஏனாமில் 150 பேரும், மாகேவில் 125 பேரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். இரண்டு தினங்களில் ஒட்டுமொத்தமாக 17, 013 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.