’இறுதிச் சடங்குக்கு பணமில்லை..’தாத்தா சடலத்தை பிரிட்ஜூக்குள் வைத்த பேரன்

இறுதிச் சடங்கு செய்வதற்கு பணமில்லை என்பதால் தாத்தாவின் சடலத்தை குளிர்சாதனப் பெட்டிக்குள் பேரன் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தெலங்கானா மாநிலம் வாரங்கல் அருகே பர்காலா என்ற பகுதியை சேர்ந்தவர் நிகில். இவர்…

இறுதிச் சடங்கு செய்வதற்கு பணமில்லை என்பதால் தாத்தாவின் சடலத்தை குளிர்சாதனப் பெட்டிக்குள் பேரன் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெலங்கானா மாநிலம் வாரங்கல் அருகே பர்காலா என்ற பகுதியை சேர்ந்தவர் நிகில். இவர் தனது தாத்தாவுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். தாத்தாவுக்கு வந்த பென்சன் பணத்தை வைத்து இருவரும் செலவு செய்து வந்தனர். இந்நிலையில் 93 வயது தாத்தாவுக்கு சில நாட்களுக்கு முன் உடல் நிலை சரியில்லாமல் போனது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு, வீட்டுக்கு வந்த தாத்தா திடீரென மூன்று நாட்களுக்கு முன் உயிரிழந்தார். இதனால் செய்வதறியாது நின்ற நிகில், தாத்தாவின் உடலை பிரிட்ஜூக்கும் வைத்து பூட்டினார்.

இந்நிலையில் அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்து வீட்டினர் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். போலீசார் வீட்டுக்கு வந்து விசாரித்தபோது, இந்த தகவல்கள் தெரியவந்தன. தாத்தாவின் பென்சனை தொடர்ந்து பெறுவதற்காக அவர் உடலை நிகில் மறைத்தாரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின் றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.