டெல்டா பிளஸ் வைரஸால் மகாராஷ்டிராவில் 3 பேர் உயிரிழப்பு

டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். மும்பையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3,21,17,826 ஆக அதிகரித்துள்ள நிலையில் கொரோனா தொற்றின் இரண்டாம்…

டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். மும்பையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3,21,17,826 ஆக அதிகரித்துள்ள நிலையில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பாதிப்பானது சற்றே குறைந்துள்ளது. ஆனால் தற்போது டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு பெரும் அச்சுறுத்தலாக உருவாகியுள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் மூவர் டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மும்பை இந்த தொற்று பாதிப்புக்கு தனது முதல் உயிரிழப்பை பதிவு செய்துள்ளது. உயிரிழந்த மூவரும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களாவார்கள். கடந்த ஜூலை 21ல் மும்பையை சேர்ந்த 63 வயது பெண்மனி இணை நோய்களோடு டெல்டா பிளஸ் பாதிப்புக்கு உள்ளானார். அவர் இரண்டு தவனை தடுப்பூசிகளை ஏற்கெனவே எடுத்திருந்தார். இதனையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 

உயிரிழந்த பெண்ணின் மரபனு வரிசைமுறை சோதனை முடிவில் டெல்டா பிளஸ் வைரஸால் உயிரிழந்தது கண்டறியப்பட்டது. இவருடன் மேலும் 7 நபர்கள் மும்பையில் டெல்டா பிளஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து இவர்களை மும்பை மாநகராட்சி தொடர்ந்து கண்காணித்து வருகிறது. உயிரிழந்த பெண்ணுடன் தொடர்பிலிருந்த இருவருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தற்போது வரை 65 பேர் டெல்டா பிளஸ் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.