சவுதியில் படிப்பின் மீது தீராகாதல் கொண்ட 84 வயது முதியவர் தேர்வெழுதிய நிலையில், தேர்வு அறை கண்காணிப்பாளராக அவரது மகன் வந்த சம்பவம் அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
ஒவ்வொருவருக்கும் ஓர் கனவு என்பது நிச்சயம் இருக்கும். கனவை நிறைவேற்ற வயது என்பது தடையல்ல. அந்த வகையில் தள்ளாத வயதிலும் படிப்பின் மீது ஆர்வம் கொண்ட முதியவர் ஓர் தேர்வெழுதியதும், அந்த தேர்வு அறைக்கு மகனே கண்காணிப்பாளராக வந்த சுவாரஸ்ய சம்பவம் சவுதியில் நிகிழ்ந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படிக்க: சஞ்சீவி மலையில் பரவி வரும் தீ: பொது மக்கள் அச்சம்
சவுதியில், தம்மாம் நகரில் படிப்பின் மீது தீராத ஆவல் கொண்ட 84 வயது பெரியவர் தனக்கு பிடித்தமான பட்டப் படிப்பை படித்து அதன் தேர்வுக்காக எக்ஸாம் ஹாலில் அமர்ந்துள்ளார். அந்த ஹாலின் தேர்வு கண்காணிப்பாளராக பேராசிரியரான அவரின் 45 வயது மகன் நியமிக்கப்பட்டுள்ளார். தன்னுடைய தேர்வு ஹாலுக்கு தனது மகனே கண்காணிப்பாளராக வருவார் என்பதை அறியாத அந்த முதியவர் அவரைப் பார்த்ததும் ஆச்சரியமடைந்தார். இச்சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-ம.பவித்ரா