மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீது நடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பு நடைபெற்றது. சட்டத்திருத்த மசோதா என்பதால் மசோதா வெற்றி பெற 3ல் 1 பங்கு பெரும்பான்மை தேவை.
ஆனால் மொத்தமுள்ள 545 உறுப்பினர்களில் 298 பேர் மட்டுமே மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். இதனால் மசோதா வாக்கெடுப்பில் தோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஆதவளிக்க மறுத்த இந்தியா கூட்டணி கட்சிகளை எதிர்த்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் வீட்டின் அருகே பாஜக மக்களவை எம்.பி.க்களான ஹேமா மாலினி, பன்சூரி ஸ்வராஜ் மற்றும் பலர் பேரணி நடத்தினர்.
இதனை தொடர்ந்து பன்சூரி ஸ்வராஜு உள்ளிட்டோர் டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.







