சுங்கச்சாவடி கட்டணம் மூலம் 81,227.55 கோடி ரூபாய் வருவாய் !

மக்களவையில் எழுத்துப்பூர்வமாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர். பத்து ஆண்டுகளாகப் பயன்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் பயனீட்டாளர் கட்டணத்தைக் குறைக்கவோ அல்லது மறு ஆய்வு செய்யவோ மத்திய அரசிடம் ஏதேனும்…

மக்களவையில் எழுத்துப்பூர்வமாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்.

பத்து ஆண்டுகளாகப் பயன்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் பயனீட்டாளர் கட்டணத்தைக் குறைக்கவோ அல்லது மறு ஆய்வு செய்யவோ மத்திய அரசிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா? கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள சுங்கச்சாவடிகளிலிருந்து கிடைக்கப்பெற்ற வருவாய் எவ்வளவு? என மக்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுத்துப்பூர்வமாகக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு எழுத்துப் பூர்வமாகப் பதிலளித்த மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி கடந்த 10 ஆண்டுகளாகப் பயன்பாட்டிலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் பயனீட்டாளர் கட்டணத்தைக் குறைப்பதற்கான எவ்வித ஆலோசனையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என்றும், கடந்த 2018-2021 காலகட்டத்தில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடி கட்டணம் மூலம் 81,227.55 கோடி ரூபாய் வருவாய் மத்திய அரசுக்குக் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.