முக்கியச் செய்திகள் தமிழகம்

7-ம் தேதி பரப்புரையை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரையை வரும் எடப்பாடி பழனிசாமி வரும் 7-ம் தேதி தொடங்கவுள்ளார்.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரேகட்டமாக தேர்தல், பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற உள்ளது. பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்கான தொகுதி பங்கீடு, தேர்தல் பரப்புரை உள்ளிட்ட பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கி விட்டன. அந்த வகையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையை வரும் 7-ம் தேதி தொடங்குவார் என கட்சி தலைமை அறிவித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் பிப்ரவரி 7-ம் தேதி சிவகாசி, நாகர்கோவில், நெல்லை, தூத்துக்குடியிலும், பிப்ரவரி 8-ம் தேதி – மதுரை, திண்டுக்கல், கரூர் மற்றும் திருச்சியிலும் பரப்புரை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பிப்ரவரி 10-ம் தேதி – வேலூர், காஞ்சிபுரம், தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகளிலும், பிப்ரவரி 11-ம் தேதி – வடசென்னை, தென்சென்னை, சென்னை புறநகர் பகுதிகளிலும், பிப்ரவரி 14-ம் தேதி கோவை, திருப்பூர் மற்றும் ஈரோட்டிலும் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அடுத்த தலைவர்

Web Editor

இந்திய வீரர்களை பாகிஸ்தான் ஜெர்சியில் சித்தரித்து வீடியோ; சமூக வலைதளத்தில் சர்ச்சை

EZHILARASAN D

பொருளாதார ஆலோசனைக் குழுவின் செயல்பாடுகள் என்ன?

Jeba Arul Robinson