முக்கியச் செய்திகள் தமிழகம்

இலங்கை தமிழர்கள் 8 பேர் தமிழகம் வருகை

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இரண்டு மாத கை குழந்தையுடன் 8 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் உணவு பொருட்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதனால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து இலங்கையில் இருந்து 133 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், இரண்டு மாத கைக்குழந்தையுடன் மேலும் 8 இலங்கை தமிழர்கள் நேற்று இரவு தனுஷ்கோடி மூன்றாம் மணல் திட்டில் வந்தடைந்தனர். இலங்கை யாழ்பாணம் மாவட்டம் கிருபாகரன் அவரது மனைவி சாந்தி மற்றும் அவர்களது இரண்டு மகள்கள் மேலும் கிளிநொச்சி மாவட்டம் சேர்ந்த சந்திரகுமார், அவரது மனைவி டெலிசித்திரம், அவர்களது இரண்டு மாத கைக்குழந்தை என மொத்தமாக 8 பேர் இலங்கையிலிருந்து படகில் நேற்று காலை புறப்பட்டு தனுஷ்கோடி அருகே உள்ள மூன்றாம் மணல் தீடை பகுதியில் நேற்று இரவு வந்து இறங்கினர்.


இதுகுறித்து தகவலறிந்து மண்டபம் கடலோர காவல் படையானர் மூன்றாவது மணல் தீடையிலிருந்த இலங்கைத் தமிழர்களை ஃஹேவர் கிராஃப்ட் படகு மூலம் மீட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை கரைக்கு கொண்டு வந்து ராமேஸ்வரம் மரைன் போலீசாரம் ஒப்படைத்தனர். விசாரணைக்கு பிறகு 8 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர். மேலும் தமிழகத்திற்கு வந்த இலங்கையிலிருந்து வந்த அகதிகளின் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ராகுல்காந்தியிடம் பிக்பாக்கெட் அடித்தது யார்? சர்ச்சையை கிளப்பிய எம்.பி ட்விட்.

G SaravanaKumar

திமுக ஆட்சியில் மின்தடை; மாயத் தோற்றம் ஏற்படுத்தும் எதிர்க்கட்சிகள் – செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

G SaravanaKumar

இந்திய-சீன எல்லை விவகாரம்: சரத்பவார், ஏ.கே.அந்தோணியிடம் அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்

EZHILARASAN D