தமிழ்நாடு நிதியமைச்சர் பொறுப்புக்கு பழனிவேல் தியாகராஜன் சற்றும் பொருத்தமில்லாதவர் என வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய அரசு திட்டங்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் பெரிய கடைவீதியில் பணிபுரியும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் மத்திய அரசின் திட்டங்களில் பதிவு செய்வதற்காக வருகை
தந்தனர். அவர்களுக்கு இலவசமாக பதிவு செய்து தரப்பட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன், பாரதப் பிரதமர் மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதில் ஐந்து லட்ச ரூபாய்க்கான ஆயுஷ் மான் பாரத் காப்பீடு திட்டம், அமைப்புசாரா தொழிலாளர்கள் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டால் ஒரு லட்சம் நிதி உதவி, உயிரிழப்பு ஏற்பட்டால் அவரது குடும்பத்தினருக்கு 2 லட்சம் நிதி உதவி வழங்கும் இ-ஷாரம் திட்டம் ஆகியன முக்கியமானவை என்றார்.
2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் இத்திட்டத்தில் இணைத்துக்கொள்ள தகுதியானவர்கள். அந்த அடிப்படையில்
ஆயுஷ்மான் பாரத் திட்டம் மற்றும் இ-ஷாரம் திட்டத்தில் பதிவு செய்வதற்கான இலவச முகாமில் மக்கள் பலர் கலந்து கொண்டனர். ஏற்கனவே பதிவு செய்தவர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது.
மாநில தொழிலாளர் நலத்துறை சார்பில் இத்திட்டத்தை தீவிரமாக முன்னெடுக்கவேண்டும். அதிக தொழிலாளர்களை கொண்ட தமிழ்நாட்டில் இத்திட்டம் குறித்து முகாம்கள் நடத்தி அமைப்பு சாரா தொழிலாளர்களை இத்திட்டத்தில் இலவசமாக பதிவு செய்ய வேண்டும். இது குறித்து தான் சட்டப்பேரவையில் பேசியபோது, மிக குறைவான எண்ணிக்கையில் மட்டுமே தற்போது இத்திட்டத்தில் பயனாளிகள் உள்ளதாக அத்துறையின் அமைச்சர் தெரிவித்தார். எனவே கோடிக்கணக்கான தொழிலாளர்கள் உள்ள நமது மாநிலத்தில் அதிக அளவில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் திட்டத்தில் இணைக்கப்பட வேண்டும்.
தமிழ்நாடு அரசு மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்துவதில் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. எனவே எந்த விதமான வித்தியாசமும் கருதாமல் மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களை தமிழ்நாடு அரசு அமல்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். மேலும் எந்த ஒரு ஆக்கப்பூர்வமான விமர்சனம் வைத்தாலும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அந்த பொறுப்புக்கு சற்றும் பொருத்தமில்லாமல் கீழ்தராமன விமர்சனம் வைகிக்கிறார் நிதியமைச்சர் என குற்றம்சாட்டினார்.
தான் வெளிநாட்டில் படித்தவன் என்றும் மத்திய அரசு அறிவுறை கூற என்ன நோபல் பரிசா வாங்கினார்கள் என்றும் பல்வேறு கருத்துகளை கூறும் அவர், படித்தவர்களா ஆட்சி
நடத்தனும் என்று கேள்வி எழுப்பினார். நிதியமைச்சரின் கருத்துக்கு முதலமைச்சர் தான் பதில் கூற வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும் அவர் சொல்வதை பற்றி நாங்கள் கவலை படுவதில்லை என்றும் விளக்கமளித்தார்.
– இரா.நம்பிராஜன்