முக்கியச் செய்திகள் இந்தியா

மினி பேருந்து கவிழ்ந்து 8 பேர் உயிரிழப்பு: 12 பேர் படுகாயம்

காஷ்மீரில் மினி பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில், 8 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயமடைந்தனர்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள தத்ரி நகரில் இருந்து தோடா (Doda)வுக்கு மினி பேருந்து ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. சுயி க்வாரி ( Sui Gwari) என்ற பகுதியில் அந்த பேருந்து வந்துகொண்டிருந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து செனாப் ஆற்றின் குறுக்கே உள்ள ஆழமானப் பள்ளத்தாக்கில் பேருந்து விழுந்து கவிழ்ந்தது.

இதில், பேருந்தில் இருந்த 8 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 12-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து பாதுகாப்புப் படையினரும் அந்தப் பகுதியை சேர்ந்தவர்களும் உயிரிழந்தவர்களையும் காயமடைந்தவர்களையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

பிரேசில் தடுப்பூசி ஒப்பந்தத்தில் முறைகேடு இல்லை: பாரத் பயோடெக் மறுப்பு

Halley karthi

சட்டப்பேரவை கூட்டத்தொடர் செப்.13ம் தேதியுடன் நிறைவு

Halley karthi

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் நோட்டீஸ்!

Halley karthi