முக்கியச் செய்திகள் செய்திகள்

இந்தியாவில் இதுவரை 8.7 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி!

இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்தாலும், மறுபுறம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 8.7 கோடியை தாண்டியுள்ளது.

கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக இது வரை நாடு முழுவதும் 8.7 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா மேலும் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையை படைத்துள்ளது. இது வரை 13 லட்சத்து 32 ஆயிரத்து 130 முகாம்களில 8,,77,474 8 கோடியே 70 லட்சத்து 77 ஆயிரத்து 474 பயனாளிகளுக்குக் கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 81 -வது நாளான ஏப்ரல் 6 அன்று நாடு முழுவதும் 33 லட்சத்து 37 ஆயிரத்து 601 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்தியாவில் அன்றாட புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 736 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு, மகாராஷ்டிரா, சத்திஸ்கர், கர்நாடகா,உத்தரப் பிரதேசம், தில்லி, மத்தியப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய எட்டு மாநிலங்களில் அன்றாட கொவிட் புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் பதிவான புதிய பாதிப்புகளில் இந்த மாநிலங்களில் மட்டும் 80.70 விழுக்காடு பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 55 ஆயிரத்து 469 பேரும், சத்திஸ்கரில் 9 ஆயிரத்து 921 பேரும், கர்நாடகாவில் 6 ஆயிரத்து 150 பேரும் , தமிழ்நாட்டில் 3 ஆயிரத்து 645 பேரும் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.இந்தியாவில் தற்போது 8,43,473 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 6.59 சதவீதமாகும்.நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 17 லட்சத்து 92 ஆயிரத்து 135 ஆக , அதாவது 92.11 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 52,847 பேர் புதிதாகக் குணமடைந்துள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் 630 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஏப்ரல் 8 ஆம் தேதி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.அக்கூட்டத்தில் தடுப்பூசிகளை செலுத்துவதை மேலும் அதிகப்படுத்துதல், நோய் பரவலை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்தும் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது .

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram