ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜராவதில் இருந்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விலக்கு அளித்தது.
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தொடர்பாக இருவரும் இன்று நேரில் ஆஜராக டெல்லி ரோஸ் அவென்யூ சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.கே.நாக்பால் அமர்வில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் தரப்பில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுவதிலிருந்து விலக்குக் கோரி மனுதாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
என்ன காரணத்துக்காக விலக்கு கோருகிறீர்கள் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்கள், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று மாலை தான் முடிவடைந்தது, தேர்தல் தொடர்பாக பணிகளில் இருவரும் ஈடுபட்டிருந்ததால் அவர்களால் இன்று வர இயலவில்லை, எனவே விலக்கு கோருகிறோம் என்று குறிப்பிட்டனர்.
இதனை ஏற்ற நீதிபதி நேரில் ஆஜராவதிலிருந்து ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டார். வழக்கையும் ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.