ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸ் – மத்திய அரசு அறிவிப்பு!

நாடு முழுவதும் உள்ள ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, நான் -கெசட்டட் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்…

நாடு முழுவதும் உள்ள ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, நான் -கெசட்டட் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்,  இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டதாக,  மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பின் மூலம், லேகோ பைலட்டுகள்,  ரயில்வே கார்டுகள்,  ரயில் நிலைய மேலாளர்,  கண்காணிப்பாளர்,  தொழில்நுட்ப நிபுணர்கள்,  உதவியாளர்கள் உள்ளிட்ட  11.07 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க ரூ.1,968.87 கோடி  ஒதுக்கீடு செய்யப்படும் என்று அவர் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் 2022-2023 ஆம் ஆண்டில் ரயில்வேயின் செயல்பாடு மிகவும் சிறப்பாக இருந்தது என்றும் ரயில்வே 1,509 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. கிட்டத்தட்ட 650 கோடி  பயணிகள் பயணித்துள்ளனர் என்றும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.