நாட்டின் 75வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுவதையொட்டி அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் ராணுவத்தினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
நாட்டின் 75வது சுதந்திரம் தினம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளதை தொடர்ந்து நாட்டின் எல்லைப்பகுதிகள், சர்வதேச விமானநிலையங்கள், முக்கிய நகரங்கள், மக்கள் அதிகம் கூடும் பகுதிகள், ரயில் நிலையங்களில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்திய-பாகிஸ்தான் எல்லை பகுதியான ஜம்மு காஷ்மீர் பகுதியில் அடிக்கடி தீவிரவாதிகள் ஊடுவல் சம்பவங்களும், போதைபொருள்கள், ஆயுதங்கள் கடத்துதல் போன்ற சம்பவங்கள் நடைபெறும். நாட்டின் சுதந்திரம் தின கொண்டாட்டங்களையொட்டி தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக அப்பகுதிகளில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் தர்ஹால் பகுதியில் பார்கல் என்ற இடத்தில் ராணுவ முகாம் எல்லையை கடந்து உள்ளே ஊடுருவ சிலர் முயன்றுள்ளனர். அப்போது ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 வீரர்கள் வீரமரணமடைந்தனர். ராணுவத்தின் பதிலடி துப்பாக்கி சூடு சம்பவத்தில், எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
இதையடுத்து நாளை நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாடவிருக்கும் நேரத்தில், சுதந்திர தினத்தை சுமுகமாகவும், பாதுகாப்பாகவும் நடத்துவதை உறுதி செய்வதற்காக ஜம்மு-ஸ்ரீநகரில் (NH-44) மத்திய ரிசர்வ் போலீஸ் படை கடுமையான கண்காணிப்பில் உள்ளது. இதேபோல் நாடு முழுவதும் விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.