Rugged Boys கொண்டாடும் “விருமன்” படத்தின் வசூல் இத்தனை கோடியா?

ஏழு வருடங்களுக்குப் பிறகு இயக்குநர் முத்தையா, நடிகர் கார்த்தி கூட்டணியில் கடந்த 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படம் “விருமன்”  சூர்யாவின்  2டி எண்டெய்ன்மெண்ட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு கார்த்தி, அதிதி சங்கர், சூரி, பிரகாஷ்ராஜ்…

ஏழு வருடங்களுக்குப் பிறகு இயக்குநர் முத்தையா, நடிகர் கார்த்தி கூட்டணியில் கடந்த 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படம் “விருமன்”  சூர்யாவின்  2டி எண்டெய்ன்மெண்ட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு கார்த்தி, அதிதி சங்கர், சூரி, பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இயக்குநர் முத்தையா, நடிகர் கார்த்தி கூட்டணியில் வெளியான  “கொம்பன்” படம் போலவே கிராமத்துப் பின்னணியில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பில் வெளியானது.
 “விருமன்” திரைப்படம்  4 பாடல்கள், 5 சண்டைக் காட்சிகளோடு  நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான குடும்ப திரைப்படமாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.  கார்த்தி நடித்த படத்திலேயே ‘விருமன்’ படம் தான் அவருக்கு மிகப்பெரிய ஓப்பனிங்கை திரை ரசிகர்கள் மத்தில் ஏற்படுத்தி இருப்பதாகக் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
படம் வெளியாகிய முதல் நாளிலேயே 8 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாம். இரண்டாம் நாள் முடிவில் 16.5 கோடிக்கு அதிகமாகவும் உலகளவில் 20 கோடியைக் கடந்து வசூல் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. தொடர் விடுமுறை காரணமாக இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.