முக்கியச் செய்திகள் தமிழகம்

ஈரோடு இடைத்தேர்தலில் 74.79% வாக்குகள் பதிவு!

ஈரோடு இடைத்தேர்தலில் 74.79% வாக்குகள் பதிவானதாக தேர்தல் நடத்தும்  அதிகாரிகள் சிவகுமார் தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக கே.எஸ்.தென்னரசு, தேமுதிக ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா உள்பட பிற கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் என மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இரவு 9.30 மணி வரை தேர்தல் நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

காலை 9 மணி நிலவரப்படி 10.10%, 11 மணி- 27.70%, 1 மணி நிலவரப்படி 44.58%, பிற்பகல் 3 மணி நிலவரப்படி 59.28 வாக்குகளும், மாலை 5 மணி நிலவரப்படி 70.58 சதவிகித வாக்குகளும், இரவு 7 மணி நிலவரப்படி 74.69 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றவுடன் வாக்குச்சாவடி மையங்களில் உள்ள நுழைவு கதவுகள் மூடப்பட்டு,
வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரி பார்க்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு துணை ராணுவத்தின் உதவியுடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இரவு 9.30 மணி அளவில் முடிந்தது. இதில் 74.79% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. ஆண் வாக்காளர்கள் – 82138, பெண் வாக்காளர்கள் – 88037, இதர வாக்காளர்கள் – 17 என மொத்தம் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 192 192 (1,70,192) வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில் வேட்பாளர்கள் இருந்தபோதே நேரடியாக ஆய்வு செய்தோம் கூட்டம் அதிகமாக இருந்ததால் டோக்கன் கொடுத்து வரிசையாக வாக்களிக்க வைத்தோம். தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக ஒரு புகார் வந்துள்ளது. இந்த இடைத்தேர்தல் ஒரு சவாலாக இருந்தது பொது மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தனர்.

வாக்குப்பதிவிற்கு வழக்கமான பாதுகாப்புகளை தாண்டி இடைத்தேர்தல் என்பதால் மூன்று அடுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை முடியும் வரை பாதுகாப்பிற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தீபாவளி சிறப்பு ரயில்; மந்தமான முன்பதிவு

G SaravanaKumar

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 6 தொகுதிகள் ஒதுக்கீடு!

Jeba Arul Robinson

போட்டி தேர்வு எழுதச் சென்ற இடத்தில் காதல் : காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

EZHILARASAN D