முக்கியச் செய்திகள் தமிழகம்

2-ம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 73.27 % வாக்குகள் பதிவு

ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில், 73.27 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மற்றும் இதர மாவட்டங்களில் காலியாக உள்ள 130 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல் ஆகியவற்றை மாநில தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்திருந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கடந்த 6-ம் தேதி 9 மாவட்டங்களில் உள்ள 39 ஒன்றியங்களில், 7,921 வாக்குச்சாவடிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் 77.43 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நேற்று நடந்தது. இதில் 73.27 % வாக்குகள் பதிவாகியுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் 70% வாக்குககளும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 ஒன்றியங்களில் நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 72 % வாக்குகளும் பதிவாகியுள்ளன. வேலூர் மாவட்டத்தில் 68.5% வாக்குகளும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4 ஒன்றியங்களில் நடைபெற்ற தேர்தலில் 75.3% வாக்குகள் பதிவாகியுள்ளன.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 2 ஒன்றியங்களில் நடைபெற்ற வாக்குப்பதிவில், 73.5% வாக்குகளும், விழுப்புரம் மாவட்டத்தில் 6 ஒன்றியங்களில் நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலில், 83.6% மக்களும் வாக்களித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 82% வாக்குகளும், திருநெல்வேலி மாவட்டத்தில் 4 ஒன்றியங்களில் நடைபெற்ற தேர்தலில், 65% வாக்குகளும், தென்காசி மாவட்டத்தில் 70% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

விரைவில் ’மக்கள் ஐடி’ – தமிழக மக்களை அடையாளப்படுத்த அரசு திட்டம்

G SaravanaKumar

பள்ளி, கல்லூரி மாணவர்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் – அமைச்சர் அறிவிப்பு

G SaravanaKumar

‘ஓய்வு பெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையிலான குழுவை முடக்கியது ஏன்’ – முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்

Arivazhagan Chinnasamy