மூதாட்டியை நிர்வாணப்படுத்தி நகை, பணம் கொள்ளை! ஒருவர் கைது!!

சென்னை அரும்பாக்கத்தில், 70 வயது மூதாட்டியை கத்தியால் தாக்கி 25 சவரன் நகை மற்றும் 60 ஆயிரம் பணத்தை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். சென்னை அரும்பாக்கம், அம்பேத்கர் தெருவை சார்ந்த…

சென்னை அரும்பாக்கத்தில், 70 வயது மூதாட்டியை கத்தியால் தாக்கி 25 சவரன் நகை மற்றும் 60 ஆயிரம் பணத்தை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை அரும்பாக்கம், அம்பேத்கர் தெருவை சார்ந்த 70 வயது மூதாட்டி கங்கா. அவரை நான்கு மர்ம நபர்கள் கை மற்றும் வாயை துணியால் கட்டி விட்டு கழுத்து, காது, கை உள்ளிட்டவைகளில் அணிந்திருந்த நகைகள் மற்றும் பீரோவை உடைத்து 60 ஆயிரம் பணம் ஆகியவை கொள்ளையடித்தது மட்டுமல்லாமல் மூதாட்டியின் கைவிரல் வெட்டியதோடு,  நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து மூதாட்டி அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்த அரும்பாக்கம் போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். பாட்டியின் குடும்பத்தாரர் இந்த சம்பவம் அவரது மகனுக்கு தொழில் போட்டியின் காரணமாக வைத்த குறி என சந்தேகிக்கின்றனர்.

இதனிடையே, மூதாட்டியை நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்து கத்தி முனையில் 25 சவரன் தங்க நகை மற்றும் 60 ஆயிரம் பணம் கொள்ளைடிக்கப்பட்ட சம்பவத்தில் மணிகண்டன் என்பவரை அரும்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.

—அனகா காளமேகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.