திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் கோலாகலம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் என்ற பெயரில் முழுவதுமாக கழுவி சுத்தம் செய்யும் வைபவம் நடைபெறுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் தெலுங்கு வருடப்பிறப்பு, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரமோற்சவம், வைகுண்ட ஏகாதசி…

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் என்ற பெயரில் முழுவதுமாக கழுவி சுத்தம் செய்யும் வைபவம் நடைபெறுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் தெலுங்கு வருடப்பிறப்பு, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரமோற்சவம், வைகுண்ட ஏகாதசி திரு நாட்களுக்கு முன் வரும் செவ்வாய்க்கிழமை இக்கோயிலை ஒரு ஆழ்வாராக கருதி, ஆழ்வார் திருமஞ்சனம் என்ற பெயரில் முழுவதுமாக கழுவி சுத்தம் செய்யும் வைபவம் நடைபெறும்.

இன்று இந்த வைபவம் நடத்தப்பட்டது. அப்போது கருவறை முதல் கோயிலின் அனைத்து பகுதிகளும் அதாவது கருவறை, தங்க கோபுரம், கொடிமரம், பலிபீடம், துணை கோவில்கள், பிரசாத தயாரிப்பு கூடங்கள், கழுவி சுத்தம் செய்ப்பட்டன. அதன் பின் சந்தனம், ஜவ்வாது, கிச்சலி கட்டை, நாமக்கட்டி ஆகியவை உள்ளிட்ட சுகந்த திரவியங்களால் தயார் செய்யப்பட்ட பரிமளம் என கூறப்படும் பசை கோவலில் சுவர்களுக்கு பூசப்பட்டது.

இதை தொடர்ந்து தேவஸ்தான ஜீயர்கள் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சம்ர்பித்தனர். நாளை உகாதி திருநாள் ஆகும். இன்று 12 மணிக்கு மேல் பக்தர்கள் சாமி கும்பிட அனுமதி அளிக்கப்பட்டது.

—அனகா காளமேகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.