கார் பந்தயத்தி ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழப்பு | அதிர்ச்சி வீடியோ!

இலங்கையில் கார் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.  இலங்கையில் தியத்தலாவை பகுதியில் கார் பந்தயப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பிரபல கார் பந்தய வீரர்கள்…

இலங்கையில் கார் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 

இலங்கையில் தியத்தலாவை பகுதியில் கார் பந்தயப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பிரபல கார் பந்தய வீரர்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்தப் போட்டியை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான பார்வையாளர்களும் அங்கு திரண்டிருந்தனர். அப்போது தடத்தில் அதிவேகத்தில் வந்த கார் ஒன்று திடீரென நிலை தடுமாறி தடத்திலேயே கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இருந்த போதும் அடுத்தடுத்து வந்த கார்கள் அதனைக் கடந்து சென்று கொண்டிருந்தன. விபத்து நடந்ததைக் கண்ட ஓட்டுநர் ஒருவரின் கார், கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அந்த கார் தடத்தின் அருகே நின்று போட்டியை பார்வையிட்டுக் கொண்டிருந்த கூட்டத்தினர் மீது பாய்ந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் பார்வையாளர்கள் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

https://twitter.com/senior_tamilan/status/1782002428889424308?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1782002428889424308%7Ctwgr%5Edec95534d44c9d4683969b555901ed31f354ffd5%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fkamadenu.hindutamil.in%2Fcrime-corner%2F6-dead-and-several-injured-as-race-car-hits-onlookers-in-srilanka

இதையடுத்து காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த கார் பந்த போட்டி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் உரிய பாதுகாப்பு வசதிகளின்றி இந்த போட்டியை நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனிடையே இந்த விபத்தின் போது பார்வையாளர்கள் எடுத்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.