முக்கியச் செய்திகள் தமிழகம்

தூத்துக்குடி இலங்கை அகதிகள் முகாமில் எம்பி கனிமொழி ஆய்வு!

தூத்துக்குடி இலங்கை அகதிகள் முகாமில் மக்களவை உறுப்பினர் கனிமொழி ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்திற்கு உட்பட்ட ராம்தாஸ் நகர் சிலோன் காலனி இலங்கை அகதிகள் முகாம் வாழ் தமிழர்களுக்கு, முன்னாள் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் கனிமொழி தலைமை தாங்கி, அகதிகள் முகாமில் உள்ள 57 குடும்பங்களுக்கு நலத்திட்ட தொகுப்புகளை வழங்கினார்.

தொடர்ந்து மக்களின் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றுக்கொண்ட அவர் கூறுகையில்,முகாமில், அரசால் கணக்கிடப்பட்டுள்ள 57 குடும்பங்களை சார்ந்த 158 பேர்களை தவிர இதர முகாம்களிலிருந்து இங்கு வந்தவர்களும், குடியுரிமை பெறாமல் முகாமில் தங்கவைக்க பட்டுள்ளவர்களுக்கும்கூடிய விரைவில் தேவையான உதவிகள் அனைத்தையும் செய்து தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், அகதிகள் மறுவாழ்வு வட்டாட்சியர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement:

Related posts

2 மாதத்தில் 40 ஆயிரம் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு!

Halley karthi

அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கட்சியில் இருந்து திடீர் நீக்கம்!

Vandhana

கருணாநிதி பிறந்த நாள்: 7 திட்டங்களை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Halley karthi