அமெரிக்காவை சேர்ந்த 61 வயதான முதியவர் படுத்துக் கொண்டே ஓட்டும் வித்தியாசமான சைக்கிளில் உலகை சுற்றி வருபவருக்கு கரூர் அருகே பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியை சேர்ந்தவர் ரிச் ஹேகெட் (61). இவர் 1962
ஆம் ஆண்டு பிறந்தார். திருமணம் ஆகாத இவர், தனது தாய் மற்றும் சகோதரருடன்
வசித்து வருகிறார். சமையலில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்து வந்துள்ளார். அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் சமையலராக பணிபுரிந்து, தற்போது ஓய்வு பெற்றுவிட்டார்.
இந்த நிலையில், இவருக்கு உலகம் முழுவதும் சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஆவல்
தோன்றியது. அதனை தொடர்ந்து 1991-ல் இருந்து தற்போது வரை 120 நாடுகளுக்கு மேல் பயணம் செய்துள்ளார்.
இதையும் படியுங்கள்;வன்னியர் இடஒதுக்கீடு – தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.!
2013ல் இருந்து 40,000 கி.மீ-க்கு மேல் இந்த சைக்கிளில் பயணித்துள்ளார்.
சராசரியாக ஒரு நாளைக்கு 80-125 கி.மீ செல்கிறார். செல்லும் வழியில்
உள்ள ஹோட்டல்களில் தங்கி செல்வதாகவும், மேலும் நாட்டை பொறுத்து சில நேரங்களில்
சொந்தமாக உணவை சமைத்து சாப்பிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியா வழியாக 2014, 2015, 2018-லிருந்து தற்போது 2023ல் பயணம் மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார். 2013-ஆம் ஆண்டு முதல் கைகளில் பின்பக்கமாக பிடித்தபடி படுத்துக் கொண்டே கால்களில் முன்பக்கமாக மிதிக்கும் வகையிலான வித்தியாசமான வடிவமைப்பிலான சைக்கில் மூலம் உலகை சுற்றும் பயணத்தை தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில், கரூர் மாவட்டம், மலைக்கோவிலூர் வழியாக பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். மேலும் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.







