சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் நடிக்க விருப்பம் -ஜி.பி.முத்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அதை வாழ்க்கையில் பெரிய விஷயமாக நினைப்பேன், சிறிய வேடமாக கிடைத்தால் கூட பெரிய விஷயம் என்று ஜி.பி.முத்து தெரிவித்துள்ளார். கரூரில் உள்ள தனியார் திருமண…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அதை வாழ்க்கையில் பெரிய விஷயமாக நினைப்பேன், சிறிய வேடமாக கிடைத்தால் கூட பெரிய விஷயம் என்று ஜி.பி.முத்து தெரிவித்துள்ளார்.

கரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் எம்.கே இவெண்ட்ஸ் சார்பில் நம்ம
திருவிழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள யூடியூப் பிரபலம் ஜி பி முத்து
வந்திருந்தார்.

அப்போது நீயூஸ் 7 தமிழ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர்,  கரூர் மக்களின் அன்பு சூப்பர். எனக்கு ஹார்ட்டின்லாம் விட்டாங்க அது சந்தோசமாக இருந்தது. சன்னி லியோன் படத்தில் நடித்தது மகிழ்ச்சி.அவர் ஏழை குழந்தைகள் படிக்க வைக்கிறார் என கூறினார்.

நீயூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி வாயிலாக 2023 பொது மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக
இருக்க வேண்டும். இயக்குனர் சுசீந்திரன் படத்தில் நடித்துள்ளேன்.


தல அஜித்தின் துணிவு படத்தில் நடித்துள்ளேன். அடுத்ததாக தளபதி விஜய் மற்றும்
சூப்பர் ஸ்டார் ரஜினி படத்தில் நடிக்க விருப்பம் உள்ளது. அதை என் வாழ்க்கையில்
பெரிய விஷயமாக நினைப்பேன். ஒரு சிறிய வேடமாக கிடைத்தால் கூட பெரிய விஷயமாக கருதுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.