இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 6 பேர் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இராமேஸ்வரம் மீனவர்கள் ஆறு பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.  இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வாரவிடுமுறை விற்பனைக்காக நேற்று சுமார் 500க்கும் மேற்பட்ட விசை படகுகளில் மீன்பிடிக்க மீனவர்கள்…

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இராமேஸ்வரம் மீனவர்கள் ஆறு பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வாரவிடுமுறை விற்பனைக்காக நேற்று சுமார் 500க்கும் மேற்பட்ட விசை படகுகளில் மீன்பிடிக்க மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இந்த நிலையில் தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தங்கச்சிமடத்தை சேர்ந்த ஒரு விசைப்படகையும் அதிலிருந்த ஆறு மீனவர்களையும் கைது செய்து மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படும் மீனவர்கள் சிறையில் அடைக்கபடுவார்களா அல்லது விடுதலை செய்யப்படுவார்களா என்பது பின்னர் தெரியவரும்.

தொடர்ச்சியாக இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கை காரணத்தினால் ராமேஸ்வரம் பகுதியில் உள்ள மீனவர்கள் மிகுந்த கவலை அடைந்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.