முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டில் 6.18 கோடி வாக்காளர்கள் – தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்

வரைவு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் தமிழ்நாட்டில் 6 கோடியே 18 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி சென்னை சாந்தோம் CSI பள்ளியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”தமிழ்நாட்டில் தற்போது 6 கோடியே 18 லட்சத்து 26 ஆயிரத்து 182 வாக்காளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில், அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 6,66,464 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 1,72,211 வாக்காளர்களும் உள்ளனர். வாக்காளர்களில் 7758 பேர் மூன்றாம் பாலினத்தை சார்ந்தவர்கள். ஒருவர் கூட வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபடக் கூடாது என்பதில் தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது.

இந்த மாதம் 12, 13, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். அந்த முகாம்கள் மூலமாக பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்துதல் பணிகளை மேற்கொள்ளலாம். இறந்தவர்களின் பெயர்கள், இரட்டைப் பதிவாக இருக்கும் பெயர்கள் என 17 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

4 வயது குழந்தையின் உயிரை காப்பாற்றிய அரசு மருத்துவமனை மருத்துவர்கள்

Jeba Arul Robinson

உலக கோப்பை கால்பந்து: கோல் அடிக்காமல் ரசிகர்களை ஏமாற்றிய குரோஷியா-மொராகோ அணிகள்

EZHILARASAN D

2ஜி முதல் 5ஜி வரை…அரசியல் களத்தில் மீண்டும் அலைக்கற்றை சர்ச்சை…

Web Editor