வட மாநில ஐஸ் வியாபாரியிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல்

விழுப்புரம் ரயில் நிலையத்தில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாரால் வட மாநில ஐஸ் வியாபாரி கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டது உத்திரபிரதேசத்தில் இருந்து ரயிலில் மூலம் கஞ்சா…

விழுப்புரம் ரயில் நிலையத்தில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாரால் வட மாநில ஐஸ் வியாபாரி கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டது

உத்திரபிரதேசத்தில் இருந்து ரயிலில் மூலம் கஞ்சா கடத்தி வரப்படுவதாக விழுப்புரம் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் விழுப்புரம் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு காவலர்கள் விழுப்புரம் ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது உத்திரபிரதேச மாநிலம் கான்பூரை சார்ந்த  ஐஸ் வியாபாரி அனிஷ் அலி என்பவரின் பையை சோதனை செய்தனர். அதில் கஞ்சா இருப்பதை அடுத்து போதனை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் அனிஷ் அலியை கைது செய்து அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கஞ்சா கடத்திய நபரிடம் நடத்திய விசாரணையில், கடந்த பத்து வருடங்களாக
உத்திரபிரதேசத்தில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்தி வந்து புதுச்சேரி கடலூர் ஆகிய
பகுதிகளில் விற்பனை செய்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் முழு விசாரனை செய்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.