தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 547 பேருக்கு புதிதாக கொரோனா தொற்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைய தொடங்கியுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது. இருப்பினும் மக்கள் பொது இடங்களில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விவரத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று 547 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 35 லட்சத்து 63 ஆயிரத்து 420 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 649 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 35 லட்சத்து 21 ஆயிரத்து 357 ஆக அதிகரித்துள்ளது.கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 5 ஆயிரத்து 630 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று பாதிப்புக்கு இன்று யாரும் உயிரிழக்கவில்லை.







