முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம் செய்திகள்

தமிழ்நாட்டில் புதிதாக 5,415 பேருக்கு கொரோனா தொற்று!

தமிழ்நாட்டில் புதிதாக 5,415 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 5,415 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. .

தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 409 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற் கொள்ளப்பட்டது. இதில் 5 ஆயிரத்து 415 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்து 60 ஆயிரத்து 747 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றில் இருந்து 7 ஆயிரத்து 661 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 23 லட்சத்து 83 ஆயிரத்து 624 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில், 148 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 32 ஆயிரத்து 199 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையிலும் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. சென்னையில் புதிதாக 314 பேர் கொரோனா வால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கையும் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 328 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஈரோட்டில் 574 பேருக்கும் திருப்பூரில் 337 பேருக்கும் சேலத்தில் 369 பேருக்கும் கோவையில் 671 பேருக்கும் புதிதாகத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 31 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

முதல் முறையாக முதல்வர் பொறுப்பேற்கும் மு.க.ஸ்டாலின்!

Ezhilarasan

தங்கும் விடுதிகளில் போலீசார் தீவிர சோதனை

Gayathri Venkatesan

டெல்லி உள்பட 19 மாநிலங்களில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு!

Halley karthi