வேலூரில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை மற்றும் 2 மகன்கள் உயிரிழந்த நிலையில், தாய் ரயில் முன்பாய்ந்துஉயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் , லத்தேரியில் மோகன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசுக் கடை உள்ளது. குடோனில் இருந்து பட்டாசுகளை எடுத்து வந்து வாடிக்கையாளர்களுக்கு மோகன் காண்பித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகப் பட்டாசுக் கடையில் தீ விபத்து ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்துச் சிதறின.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதில் கடையிலிருந்த பேரக் குழந்தைகளைக் காப்பாற்ற மோகன் சென்றபோது மூவரும் தீயில் சிக்கி உயிரிழந்தனர். 2 மகன்களும் தீயில் கருகி உயிரிழந்ததால், கடும் மன உளைச்சலில் இருந்த தாய் வித்யாலட்சுமி, இன்று அதிகாலை லத்தேரி ரயில்வே கேட் பகுதியில், ரயில் முன் பாய்ந்துஉயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். தகவலறிந்து சென்ற ரயில்வே காவல்துறை, அவரது சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.