முக்கியச் செய்திகள் இந்தியா

பீகார் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் புதிய முயற்சி

பீகார் கேடரின் ஐ.ஏ.எஸ் அதிகாரியான குந்தன் குமார் பீகாரின் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வீடு திரும்புவதற்காகவும் அவர்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காகவும் “ஸ்டார்ட் அப் சோன் (Startup zone)” என்ற புதிய அமைப்பைப் பீகாரின் சன்படியா நகரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

கொரோனா நோய்த்தொற்று பீகாரைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களில் ஒரு பேரழிவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் சூரத், லூதியானா, அமிர்தசரஸ், அகமதாபாத், மும்பை மற்றும் டெல்லி போன்ற தொலைதூர தொழில்துறை மையங்களில் பணிபுரிந்தனர்.

கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், இந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வீடு திரும்பினர். பீகாரின் தலைமையகம் அமைந்துள்ள பெட்டியா நகர் மாவட்ட நிர்வாகத்தின் தகவல்களின்படி, நாடு தழுவிய 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சுமார் 80,000 தொழிலாளர்கள் வீடு திரும்பினர்.

இதனையடுத்து கிட்டத்தட்ட 10 மாதங்களுக்குப் பிறகு, பீகார் கேடரின் ஐ.ஏ.எஸ் அதிகாரியான குந்தன் குமார் “ஸ்டார்ட் அப் சோன்”என்னும் புதிய அமைப்பை சன்பதியா நகரத்தில் நிறுவியுள்ளார். இதில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களை உயர்த்தும் வகையில் பல விதமான வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. அங்கு புதிதாக உருவாகியுள்ள 49 தொழில்முனைவோர் இன்று தங்கள் வர்த்தகத்தை மேற்கொள்கின்றனர்.

ஒரு காலத்தில் தொழிலாளர்களாக இருந்த இந்த தொழிற்சாலை உரிமையாளர்கள் தற்போது தங்கள் மாவட்டத்திலிருக்கும் சக குடியிருப்பாளர்களுக்கு வேலைக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் விரக்தியிலிருந்த நேபாளத்தின் எல்லையிலுள்ள பீகாரைச் சேர்ந்தவர்கள், தங்கள் கண்ணியத்தை மீண்டும் உயர்த்தி வருகின்றனர்.

Advertisement:

Related posts

காதலர் தினம்: களைகட்ட தொடங்கிய குன்னூர் சுற்றுலா தளம்!

Jeba

கொரோனா தடுப்பூசியை விரைவாக வழங்க வேண்டும்: பிரதமருக்குத் தமிழக முதல்வர் கடிதம்

Karthick

அம்பேத்கர் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை!

Karthick