பாஜக அரசு மக்களிடமிருந்து ரூ. 29 லட்சம் கோடி வரியாக மட்டும் வசூலித்துள்ளதாகவும், வசூலித்த பணத்தை எங்கே செலவு செய்தார்கள் என்ற கேள்வியை காங்கிரஸ் முன்வைப்பதாகவும் தேசிய செய்தி தொடர்பாளர் ஷியாமா முகமது தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு பலரும் தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருவதோடு, நேரடியாக தேர்தல் பிரச்சார களத்திலும் இறங்கி பொதுமக்களிடம் வாக்குகளையும் சேகரித்தது வருகின்றனர். இந்நிலையில் கட்சி வேலையாக சென்னை சத்தியமூர்த்தி பவனிற்கு வருகை தந்த ஷியாமா முகமது செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது பேசிய அவர் மோடியின் ஆட்சியில் சிறுபான்மையினரின் வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கப்படுகின்றன. ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகள் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் பூத் வாரியாக கொண்டு செல்ல உள்ளோம். மோடி ஆட்சியில் நாடு முழுக்க 50 கோடி வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன. பணமதிப்பிழப்பு நடவடிக்கை பல்வேறு மக்களின் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்து விட்டது. தமிழ்நாட்டில் பல்வேறு சிறு , குறு தொழில நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.
மோடி பிரதமராக பதிவியேற்றபின் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்வி குறியாகிவிட்டது. 29 லட்சம் கோடி வரியாக மட்டும் பாஜக அரசாங்கம் மக்களிடமிருந்து வசூலித்துள்ளது. வசூலித்த பணத்தை எங்கே செலவு செய்தார்கள் என்று கேள்வியை காங்கிரஸ் முன்வைக்கிறது. அறிவிக்கப்படாத அவசரநிலை இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ளது .
இந்திய ராணுவ வீரர்களை படுகொலை செய்த பின்னரும் சீனாவில் இருந்து 100 மில்லியன் டாலர் பொருட்களை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. மோடி போல் மன்கி பாத்தில் பேசாமல் மக்களிடம் நேரடியாக ராகுல் காந்தி குறைகளை கேட்டு வருகிறார். 6 லட்சம் கிராமங்கள் மூலம் 10 லட்சம் வாக்கு சாவடிகளில் அரசியலமைப்பை பாதுகாப்போம். அதற்காக கையோடு கைகோர்ப்போம் என்ற பிரச்சார இயக்கத்தை இந்திய தேசிய காங்கிரஸ் கொண்டு சேர்க்க இருக்கிறது என ஷியாமா முகமது தெரிவித்துள்ளார்.
- பி. ஜேம்ஸ் லிசா