’கொரோனா தொற்றால் தொழில் பாதிக்கப்பட்டவர்கள் கவனத்திற்கு…

தொழில் முனைவோர் கோவிட் உதவி மற்றும் நிவாரணத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ. 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தொழில் முனைவோர் கோவிட் உதவி மற்றும் நிவாரணத் திட்டத்தைச்…

தொழில் முனைவோர் கோவிட் உதவி மற்றும் நிவாரணத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ. 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தொழில் முனைவோர் கோவிட் உதவி மற்றும் நிவாரணத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ. 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா பெருந்தொற்று காலத்தில் நோயால் பாதிக்கப்பட்ட தகுதி வாய்ந்த தொழில் முனைவோர் தங்களது தொழிலை நேரடியாகவோ, வாரிசுதாரர் மூலமாகவோ மீண்டும் அமைக்கவோ அல்லது புதிய தொழில் தொடங்கவோ உதவிடும் வகையில் 25 லட்சம் வரை மானியத்துடன் கூடிய கடன் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைச் செய்தி: ‘ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1,10,000 கன அடியாக அதிகரிப்பு’

மேலும், 2020-21 மற்றும் 2021-22ம் ஆண்டுகளில் கொரோனா நோய்த் தொற்றால் தொழில் பாதிக்கப்பட்டவர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக கொரோனா தொற்றால் தொழில் முழுமையாகப் பாதிக்கப்பட்டுவிட்டது என்ற குற்றச்சாட்டுப் பெரிய அளவில் எழுந்து வந்தது. இந்த சூழ்நிலையில், பாதிக்கப்பட்டவர்களிடம் கேட்டபோது, இப்படியான ஒரு அறிவிப்பு புதிய தொழில் தொடங்கவும், நிறுத்திவைத்த தொழிலை மீட்டெடுக்கவும் உதவும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.