அந்தியூரில் போதை ஊசி பயன்படுத்திய 5 இளைஞர்கள் கைது!

அந்தியூரில் போதை ஊசி பயன்படுத்திய 5 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் பர்கூர் சாலையில், போதை ஊசி பயன்படுத்துவதாகஅந்தியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்குசென்ற போலீசார்…

அந்தியூரில் போதை ஊசி பயன்படுத்திய 5 இளைஞர்கள் கைது!

அந்தியூரில் போதை ஊசி பயன்படுத்திய 5 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பர்கூர் சாலையில், போதை ஊசி பயன்படுத்துவதாக
அந்தியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு
சென்ற போலீசார் அந்தியூர் பகுதியை சேர்ந்த தேவராஜ், அபினேஷ், ஹரிஹரன், இளம்பரிதி, சுரேஷ் ஆகிய 5 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தேவராஜ் என்பவர் ஆன்லைன்
மூலமாக ஊசி மற்றும் மாத்திரைகள் வாங்கி, தனக்கு தானே செலுத்தி விட்டு மற்ற 4
பேருக்கு செலுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து 5 பேரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்த போதை மாத்திரைகள், ஊசிகளை பறிமுதல் செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.