சென்னையில் ‘புஷ்பா 2’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி – படக்குழு அறிவிப்பு!

சென்னை தாம்பரத்தில் புஷ்பா 2 படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி வெளியான திரைப்படம் ‘புஷ்பா’.…

சென்னை தாம்பரத்தில் புஷ்பா 2 படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி வெளியான திரைப்படம் ‘புஷ்பா’. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியானது. கிட்டத்தட்ட ரூ. 350 கோடி மேல் இந்த திரைப்படம் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாம் பாகமாக ‘புஷ்பா 2 தி ரூல்’ திரைப்படம் உருவாகியுள்ளது.

இத்திரைப்படத்திற்கு ‘புஷ்பா 2 தி ரூல்’ என பெயரிடப்பட்டுள்ளது. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ‘புஷ்பா 2 தி ரூல்’ திரைப்படத்தின் டீசரும் அதனைத் தொடர்ந்து திரைப்படத்தின் பாடல்களின் லிரிக் வீடியோவும் வெளியாகி வைரலானது.

இதையும் படியுங்கள் : மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை… எவ்வளவு தெரியுமா?

புஷ்பா 2 திரைப்படம் வரும் டிசம்பர் 5-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை உலகளவில் 11,000 திரைகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா பாட்னாவில் மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. இதில் மக்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற உள்ளது. அதாவது வரும் 24ம் தேதி தாம்பரம் சாய் ராம் என்ஜினீயரிங் கல்லூரியில் உள்ள லியோ முத்து லிங்கம் அரங்கத்தில் “ஒயில்ட் பயர்” நிகழ்ச்சி மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளது.

https://twitter.com/Ags_production/status/1859255623432425883?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1859255623432425883%7Ctwgr%5E2c95aae52ce5338ac93a09898a2a72b080347dde%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dailythanthi.com%2Fcinema%2Fcinemanews%2Fpromotional-event-for-the-film-pushpa-2-the-rule-in-chennai-1131517

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.