கடைசி ஓவரில் 5 சிக்சர்… ரிங்கு சிங் அதிரடி… குஜராத்தை வீழ்த்தி கொல்கத்தா அணி த்ரில் வெற்றி

ஐபிஎல் 2023 தொடரில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நட் ரைடர்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.  ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று…

ஐபிஎல் 2023 தொடரில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நட் ரைடர்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது. 

ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் போட்டிகளில் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதியது.

இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிகை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய அந்த அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விஜய் சங்கர் 63 ரன்களும், சாய் சுதர்சன் 53 ரன்கள் விளாசினர். கொல்கத்தா அணி தரப்பில் சுனில் நரைன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இதையும் படியுங்கள் : இந்தியாவின் 25வது பெண் கிராண்ட்மாஸ்டர் ஆனார் தமிழ்நாட்டின் சவிதா ஸ்ரீ!!

இதையடுத்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி தொடக்கத்தில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் அதற்கு பின் கைகோர்த்த வெங்கடேஷ் ஐயர் மற்றும் நிதிஷ் ரானா அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தனர். தொடர்ந்து விக்கெட்டுகள் விழ கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் நின்றிருந்த ரிங்கு சிங் 5 சிக்சர்களை விளாசி அதிரடி காட்டினார். இதன்மூலம் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி த்ரில் வெற்றி பெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.