தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீராங்கனையான சவிதா ஸ்ரீ, இந்தியாவின் 25வது பெண் கிராண்ட் மாஸ்டர் என்ற பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீராங்கனையான சவிதா ஸ்ரீ, 2007 ஆம் ஆண்டு பிறந்தவர். 16 வயதான இவர், செஸ் போட்டிகளில் இந்தியாவுக்காக பல பதக்கங்களை பெற்றுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியிருந்தார்.
இதையும் படியுங்கள் : கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று – பிறந்த குழந்தைகளின் மூளையை பாதித்ததாக அதிர்ச்சி தகவல்
இந்தியாவில் நடைபெற்று வரும் அகில இந்திய செஸ் சாம்பியன்ஷிப் தொடரின், இறுதிப் போட்டியில் ஸ்வீடன் நாட்டு வீராங்கனை எரிக் ஹெட்மனுடன், சவிதா ஸ்ரீ மோதினார். அபாரமாக விளையாடி, எரிக் ஹெட்மனை வீழ்த்திய சவிதா ஸ்ரீ, இந்தியாவின் 25வது பெண் கிராண்ட்மாஸ்டர் என்ற பட்டத்தை வென்றுள்ளார். இந்த வெற்றியின்மூலம் இந்தியாவின் மிகவும் குறைந்த வயது கொண்ட கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையையும் சவிதா ஸ்ரீ பெற்றுள்ளார்.
முன்னதாக தமிழ்நாட்டு செஸ் வீராங்கனை ரஷிதா ரவி, இந்தியாவின் 24வது பெண் கிராண்ட்மாஸ்டராக பட்டம் பெற்றிருந்தார். இந்நிலையில், சவிதா ஸ்ரீ, 25வது கிராண்ட்மாஸ்டராக பட்டம் வென்றுள்ளதால், தொடர்ச்சியாக இரண்டு பெண் கிராண்ட்மாஸ்டர்களை தமிழ்நாடு பெற்றுள்ளது.







