ஒரே வேலைக்கு போட்டியிடும் 5 பேர் – வெளியானது ‘சேரன்ஸ் ஜர்னி’ வெப் தொடரின் வெளியீட்டுத் தேதி!

இயக்குநர் சேரனின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சேரன்ஸ் ஜர்னி’ என்ற வெப் தொடரின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டோகிராப் படத்தின் மூலம் மக்களின் மத்தியில் கவனம் பெற்ற வித்தியாசமான கதைக்களம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குநர்…

இயக்குநர் சேரனின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சேரன்ஸ் ஜர்னி’ என்ற வெப் தொடரின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்டோகிராப் படத்தின் மூலம் மக்களின் மத்தியில் கவனம் பெற்ற வித்தியாசமான கதைக்களம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குநர் சேரன்.  பன்முக திறமைக் கொண்ட அவர்,  இயக்கம்,  நடிப்பு,  தயாரிப்பு என பன்முக திறமைக் கொண்டு செயல்பட்டு வருகிறார்.

கே.எஸ். ரவிக்குமாரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் சேரன். அதன் பிறகு ‘பாரதி கண்ணம்மா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். மேலும்,  இவர் தவமாய் தவமிருந்து, பொற்காலம் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார.

இதையும் படியுங்கள்:  ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம் – இந்திய தூதரக உதவி எண் அறிவிப்பு!

தொடர்ந்து இவர் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திருமணம் என்ற திரைப்படத்தை கடைசியாக இயக்கினார்.  இந்த நிலையில்,  சேரன் வெப் தொடர் ஒன்றை இயக்கியுள்ளார்.  இந்த வெப் தொடருக்கு ‘சேரன்ஸ் ஜர்னி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.  இந்த வெப் தொடர் ஜன.12-ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

தொடர்ந்து இந்த வெப் தொடரின் டிரைலரும் வெளியாகியுள்ளது.  இந்த வெப் தொடர் ஒரே வேலைக்கு போட்டியிடும் 5 நபர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

இதில் சரத்குமார்,  ஆரி, பிரசன்னா,  திவ்ய பாரதி,  கலையரசன் உள்ளிட்டோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர்.  மறைந்த நடிகர் மாரிமுத்து, ஆடுகளம் நரேன்,  இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

https://twitter.com/Cheransjourney/status/1741497161312051692

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.