‘புஷ்பா 2′ திரைப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வரவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து பிரம்மாண்ட வெற்றி பெற்ற படம், ‘புஷ்பா’. பான் இந்தியா முறையில் வெளியான இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருந்தார். ஃபஹத் பாசில், சுனில், அனசூயா, தனஞ்செயா உட்படப் பலர் நடித்திருந்த இந்தப் படத்துக்குத் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.
இந்தப் படம் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் அடுத்த பாகம் இப்போது உருவாகிறது. முதல் பாகத்தை விட அதிக பட்ஜெட்டில் உருவாகும் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்நிலையில், புத்தாண்டை ஒட்டி படக்குழு ‘புஷ்பா 2‘ திரைப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வரவுள்ளதாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
https://twitter.com/M9Breaking/status/1741737095876739495







