தமிழ்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவும் நிலையில், புனேவில் இருந்து ஐந்து லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன.
தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு கூடுதலாக தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என மாநில அரசு, மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு நேரடியாகவும் தடுப்பூசிகளை கொள்முதல் செய்துவருகிறது.
இந்நிலையில், புனேவில் இருந்து பெங்களூரு வழியாக இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 42 பார்சல்களில் ஐந்து லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள், சென்னை விமான நிலையம் வந்தடைந்தன. பின்னர், அங்கிருந்து தடுப்பூசிகள், சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த தடுப்பூசிகளை, மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.







