சாம்பியன் பட்டம் வென்றார் ஆஷ்லி பார்ட்டி!

விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி சாம்பியன் பட்டம் வென்றார்.   கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர்…

விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி சாம்பியன் பட்டம் வென்றார்.

 

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நேற்று நடந்தது. இந்த ஆட்டத்தில், உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டியும், செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவும் மோதினர்.

ஒரு மணி நேரம், 56 நிமிடங்கள் நீடித்த இந்தபோட்டியில் ஆஷ்லி பார்ட்டி 6-3, 6-7, 6-3 என்ற நேர் செட் கணக்கில் பிளிஸ்கோவாவை வீழ்த்தி, முதல் முறையாக விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றார்.

இது, ஆஷ்லி பார்ட்டிக்கு 2வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டி கடந்த 2019-ல் பிரெஞ்ச் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. விம்பிள்டன் பட்டம் வென்ற முதல் ஆஸ்திரேலிய வீராங்கனை என்ற சாதனையையும் ஆஷ்லி பார்ட்டி படைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.