முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

தமிழ்நாட்டில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மற்றும் நெல்லை மாவட்ட எஸ்.பி.க்கள் உட்பட 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், மதுரை போக்குவரத்து துணை காவல் ஆணையராக இருந்த ஈஸ்வர், சென்னை புளியந்தோப்பு துணை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை காவல் பயிற்சிக் கல்லூரியின் முதல்வராக இருந்த எஸ்.ஆறுமுகசாமி, மதுரை போக்குவரத்து துணை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்த மணிவண்ணன், சென்னை காவல் பயிற்சிக் கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்த பி.விஜயகுமார், சென்னை தென்மண்டலப் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை சிஐடி சிறப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளராக இருந்த அரவிந்தன், செங்கல்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கூகுள் மேப் சேவைக்கு போட்டியாக களமிறங்கும் மேப் மை இந்தியா!

Jayapriya

இயக்குனர் வசந்தபாலனின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?

G SaravanaKumar

ஓஎன்ஜிசி நிறுவனத்தின் செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் – மீத்தேன் ஜெயராமன் ஆட்சியரிடம் மனு

Web Editor