5 ஐஏஎஸ் அதிகாரிகள் இடம் மாற்றம்

தமிழ்நாடு தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு அமைப்பின் மேலாண் இயக்குநராக பூஜா குல்கர்னி ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் 5 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தொழிலாளர்…

தமிழ்நாடு தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு அமைப்பின் மேலாண் இயக்குநராக பூஜா குல்கர்னி ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 5 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தொழிலாளர் நலத்துறை ஆணையராக முனியநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொழிற்துறை சிறப்புச் செயலாளராக லில்லி ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும்,

தமிழ்நாடு சாலைகள் திட்ட பணி இயக்குநராக பி.கணேசன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு அமைப்பின் மேலாண் இயக்குநராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் பூஜா குல்கர்னி ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நுகர்பொருள் வாணிப கழக இணை மேலாண் இயக்குநராக சங்கீதா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.