முக்கியச் செய்திகள் இந்தியா

மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதியில் இன்று வாக்கு எண்ணிக்கை

மேற்கு வங்க மாநிலத்தில் பவானிபூா் உள்ளிட்ட 3 தொகுதி இடைத்தோ்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.

முதலமைச்சர் மம்தா பானா்ஜி போட்டியிட்ட தொகுதி என்பதால் பவானிபூா் தொகுதி தோ்தல் முடிவுகள் மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. ஆனால், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானா்ஜி தோல்வியுற்றாா். இருந் தாலும் முதலமைச்சராக அவா் பதவியேற்றாா். பதவியேற்ற 6 மாதங்களுக்குள் அவா் எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதால், பவானிபூர் தொகுதி திரிணமுல் எம்.எல்.ஏ., சோபன்தே தனது பதவியை ராஜினாமா செய்தார். அந்த தொகுதிக்கு செப்.30 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

பவானிபூா் தொகுதியில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிட்டாா். அவரை எதிா்த்து பாஜக சாா்பில் பிரியங்கா டிப்ரேவால் வேட்பாளராக நிறுத்தப்பட்டாா். இத்தொகுதியில் சுமாா் 53 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. மொத்தம் 21 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட இருப்பதாக அதிகாரி கள் தெரிவித்துள்ளனர். பவானிபூர் தவிர ஷாம்ஷெர்கஞ்ச், ஜாங்கிபூர் ஆகிய தொகுதி களுக்கான வாக்கு எண்ணிக்கையும் இன்று நடக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பூரி ஜெகநாதர் ரத யாத்திரை தொடங்கியது: கொரோனாவை மீறி ஏராளமானோர் பங்கேற்பு

Ezhilarasan

அம்பேத்கரை நினைவு கூர்ந்த அரசியல் தலைவர்கள்!

Gayathri Venkatesan

பாஜகவில் இணைந்த லேடி சூப்பர் ஸ்டார்!

Arun