திருச்சியில் 47வது மாநில துப்பாக்கி சுடும் போட்டி; நடிகர் அஜித் பங்கேற்பு   

திருச்சி ரைபிள் கிளப்பில் நடைபெற்று வரும் துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித் கலந்து கொண்டு விளையாடினார். அப்போது நடிகர் அஜித்தைக் கண்ட ரசிகர்கள் உற்சாகத்துடன் முழக்கமிட்டு வரவேற்றனர்.  திருச்சி கே.கே.நகரில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் இந்திய ரைபிள் சங்கத்தின் கீழ் செயல்பட்டு…

திருச்சி ரைபிள் கிளப்பில் நடைபெற்று வரும் துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித் கலந்து கொண்டு விளையாடினார். அப்போது நடிகர் அஜித்தைக் கண்ட ரசிகர்கள் உற்சாகத்துடன் முழக்கமிட்டு வரவேற்றனர். 
திருச்சி கே.கே.நகரில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் இந்திய ரைபிள் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரைபிள் கிளப்பில் 47-வது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடுதல் பிரிவுகளில் போட்டிகள் கடந்த 24 ஆம் தேதி துவங்கியது. தமிழ்நாடு முழுவதும் துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற சுமார் 1300 போட்டியாளர்கள் கலந்து கொள்ளும் போட்டி முதல் முறையாகத் திருச்சி மாநகரம் ரைபிள் கிளப்பில் நடத்தப்படுகிறது.
10 மீட்டர், 25 மீட்டர் மற்றும் 50 மீட்டர் சுடு தளத்தில் பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் சிறியவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் எனத் தரம் பிரிக்கப்பட்டு சப்யூத் (16 வயது வரை), யூத் (19 வரை), ஜீனியர் (21 வரை), சீனியர் (21 முதல் 45 வயது வரை), மாஸ்டர் (45 வயது முதல் 60 வயது வரை) மற்றும் சீனியர் மாஸ்டர் (60 வயதிற்கு மேல்) என தனித்தனியாகப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் ரைபிள் கிளப்பில் நடைபெற்று வரும் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்வதற்காக இன்று சென்ற நடிகர் அஜித்குமாருக்கு ரசிகர்கள் தரப்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ரைபில் கிளப் முன்பாக வெளியே திரண்டு இருந்த ரசிகர்களைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டு விட்டு மகிழ்ச்சியுடன் நடிகர் அஜித்குமார் அரங்கத்திற்குள் சென்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.