‘மின் கட்டணம்; மத்திய அரசு எழுதிய கடிதத்தைக் காட்டத் தயாரா?’ – பாஜக மாநில தலைவர்

தமிழ்நாட்டில் அதிகம் பொய் சொல்லக் கூடிய அமைச்சராக முதலமைச்சர் முதல் இடத்திலும், அடுத்த இடத்தில் செந்தில்பாலாஜியும் உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் மின்சார கட்டண உயர்வைக் கண்டித்து…

தமிழ்நாட்டில் அதிகம் பொய் சொல்லக் கூடிய அமைச்சராக முதலமைச்சர் முதல் இடத்திலும், அடுத்த இடத்தில் செந்தில்பாலாஜியும் உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் மின்சார கட்டண உயர்வைக் கண்டித்து பாஜக சார்ப்பில் கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், மத்திய அரசு மின் கட்டணத்தை உயர்த்த கடிதம் எழுதியுள்ளதாகக் கூறும் அமைச்சர் செந்தில்பாலாஜி அந்த கடிதத்தைக் காட்ட வேண்டும் எனக் கூறினார். மேலும், மத்திய அரசின் அனைத்து திட்டங்களிலும் 20% சதவிகித கமிஷன் பெறுவதாகத் தெரிவித்த அவர், தமிழ்நாட்டில் அதிகம் பொய் சொல்லக் கூடிய அமைச்சராக முதலமைச்சர் முதல் இடத்திலும், அடுத்த இடத்தில் செந்தில்பாலாஜியும் உள்ளதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் மின் உற்பத்தித் திறனை அரசு குறைத்து, தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கி கமிஷன் பெறுவதாகக் குற்றம்சாட்டினார். மேலும், மே, ஜூன் 2 மாதங்களில் 4,600 கோடிக்குத் தனியாரிடமிருந்து மின்சாரத்தை வாங்கி 4% கமிஷனாக 220 கோடி பெறுவதாகக் கூறினார்.

அண்மைச் செய்தி: ‘‘கொடுக்காத வாக்குறுதிகளை நிறைவேற்றும் திமுக அரசு’ – தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்’

அமைச்சர் செந்தில்பாலாஜி ஒவ்வொரு மாதமும் ஒரு பொய் சொல்வதாகத் தெரிவித்த அவர், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் 492 கோடிக்கு நிலக்கரி தமிழ்நாட்டில் வாங்கப்பட்டுள்ளதாகவும், பணத்தை வைத்து ஜனநாயகத்தை விலை பேசும் அரசியல்வாதி தமிழ்நாட்டில் இருக்கக் கூடாது எனவும் தெரிவித்த அவர், இன்னும் 40 ஆண்டுகள் மத்தியில் பாஜக ஆட்சி தான் எனக்கூறினார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.