சென்னை, நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள 45-வது, புத்தக காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பக சங்கமான பபாசி சென்னையில் ஆண்டு தோறும் புத்தக கண்காட்சியை நடத்தி வருகிறது. இந்தாண்டு ஜனவரி 6-ஆம் தேதி புத்தக கண்காட்சி தொடங்குவதாக இருந்தது. ஆனால், கொரோனா பொருந்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக அரசு விதித்த கட்டுப்பாடுகளால் பொருட்காட்சி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.
தொற்று பரவல் குறைந்ததைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு புத்தக கண்காட்சி நடத்த அனுமதி அண்மையில் வழங்கியது. இதைத்தொடர்ந்து, பபாசி பிப்ரவரி 16-ஆம் தேதி ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் புத்தகக்கண்காட்சி தொடங்கும் என அறிவித்திருந்தது.
அதில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 60 வயதுக்கு மேற்பட்டோர், கர்ப்பிணி பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காலை 11 மணியிலிருந்து 8 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அடையாள அட்டையுடன் வரும் மாணவர்களுக்கு இலவச நுழைவுச் சீட்டும் மற்றவர்களுக்கு ரூ.10 கட்டணத்தில் நுழைவுச் சீட்டும் வழங்கப்பட்டு வருகிறது பபாசி. மேலும், Bapasi.Com என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் நுழைவுச் சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என பபாசி தெரிவித்துள்ளது. இந்த புத்தக கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது, ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து, அவர் புத்தக காட்சி அரங்குகளை பார்வையிட்டு வருகிறார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








