பல்லடம் அருகே பனியன் நிறுவன தொழிலாளியை கல்லால் தாக்கி கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த அருள்புரம் அருகே உள்ளது சேடபாளையம். இந்த பகுதியின் சாலை ஓர காட்டுப்பகுதியில் இன்று காலை 35 வயது மதிக்க தக்க நபரின் சடலம் கிடந்தது. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் பல்லடம் காவல் நிலையத்துக்கு
தகவல் அளித்தனர்.
சம்பவ இடம் சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .தொடர்ந்து நடந்த விசாரணையில் அந்த நபர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மாரிமுத்து என்பதும் அருகில் இருந்த பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக பணி புரிந்து வந்ததும் தெரிய வந்தது.
அதோடு, மாரிமுத்து தலையில் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டதையும் கண்டறிந்தனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







