முக்கியச் செய்திகள் தமிழகம்

45வது புத்தக கண்காட்சி இன்று தொடக்கம்..

ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 45வது புத்தக கண்காட்சி இன்று தொடங்குகிறது

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பக சங்கமான பபாசி சென்னையில் ஆண்டு தோறும் புத்தக கண்காட்சி நடத்தி வருகிறது. இந்தாண்டு ஜனவரி 6ம் தேதி புத்தக கண்காட்சி தொடங்குவதாக இருந்தது. ஆனால், கொரோனா பொருந்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக அரசு விதித்த கட்டுப்பாடுகளால் பொருட்காட்சி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. தொற்று பரவல் குறைந்ததைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு புத்தக கண்காட்சி நடத்த அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து பபாசி பிப்ரவரி 16ம் தேதி ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் புத்தகக்கண்காட்சி தொடங்கும் என அறிவித்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 60 வயதுக்கு மேற்பட்டோர், கர்ப்பிணி பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. புத்தக விரும்பிகள் காலை 11 மணியிலிருந்து 8 மணி வரை அனுமதிக்கப்பட உள்ளனர். அடையாள அட்டையுடன் வரும் மாணவர்களுக்கு இலவச நுழைவுச் சீட்டும் மற்றவர்களுக்கு ரூ.10 கட்டணத்தில் நுழைவுச் சீட்டும் வழங்கப்பட உள்ளது. Bapasi.Com என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் நுழைவுச் சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என பபாசி தெரிவித்திருந்தது. இந்த புத்தக கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைக்க உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த அற்புதமம்மாள்!

2665 கட்டிடங்களின் கட்டுமானத்தை நிறுத்த உத்தரவு; சென்னை மாநகராட்சி

G SaravanaKumar

தூசி நிறைந்த உணவு – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ‘வந்தே பாரத்’ ரயில்!

Web Editor