தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்திலும் நடந்து முடிந்தது.
தற்போது சண்டைக் காட்சிகளுடன் கூடிய படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் மூன்றாம் கட்டமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தான் இப்படத்தின் காட்சிகள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. அந்த லீக் ஆன வீடியோவில் உயிருக்குப் போராடும் நிலையில் உள்ள சரத்குமாரை மருத்துவமனையில் அனுமதிப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.
வெளியான காட்சியில் விஜய், பிரபு உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். மருத்துவமனை காட்சியைப் படமாக்கிக் கொண்டிருக்கும் போது, யாரோ இதைத் தனது மொபைல் போனில் படமாக்கி இணையத்தில் லீக் செய்திருப்பது தெரிகிறது.
வெளியான இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. படத்தின் முக்கியமான காட்சி இணையத்தில் கசிந்ததால், படக்குழு அதிருப்தியில் உள்ளது.







